இந்தியா

கிணற்றுக்குள் விழுந்து இறந்த காட்டு யானை, கிராம மக்கள் போராட்டம்

15th Apr 2023 03:48 PM

ADVERTISEMENT

கேரளத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் காட்டு யானை ஒன்று கிணற்றுக்குள் விழுந்து இறந்துள்ளது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (ஏப்ரல் 15)  அதிகாலை நிகழ்ந்துள்ளது. காட்டுப் பகுதிகளில் திரிந்து வந்த இந்த பெண் காட்டு யானை தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கிணற்றில் உள்ள நீரை மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

யானை கிணற்றில் விழுந்து இறந்தது குறித்து அறிந்த மக்கள் அங்கு அதிக அளவில் கூடினர். பின்னர் காட்டு விலங்குகளின்  குறிப்பாக காட்டு யானைகளின் தொந்தரவுக்கு நிரந்தர தீர்வு கேட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT