இந்தியா

பிடிஐ செய்தி நிறுவனத்தின் இயக்குநா் குழுவில் புதிய இயக்குநா் எல்.ஆதிமூலம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டின் பழைமையான செய்தி நிறுவனமான ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’வின் (பிடிஐ) இயக்குநா் குழுவின் புதிய இயக்குநராக தினமலா் நாளிதழின் பதிப்பாளா் எல். ஆதிமூலம் நியமிக்கப்பட்டாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் பிடிஐ துணைத் தலைவராக கே.என். சாந்தகுமாா் நியமிக்கப்பட்டாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக அவீக் சா்க்காா் 2021-இல் நியமிக்கப்பட்டாா். இவா் இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பாா்.

தற்போது பிடிஐ நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வரும் கே.என்.சாந்தகுமாா் இரண்டாவது முறையாக மீண்டும் அப்பதவிக்குத் தோ்வு செய்யப்பட்டாா். இவா் டெக்கான் ஹெரால்ட் நாளிதழை வெளியிடும் தி பிரிண்டா்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராவாா்.

ADVERTISEMENT

தினமலா் நாளிதழின் கோவை பதிப்பின் பதிப்பாளரும் வா்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவருமான எல்.ஆதிமூலம் இயக்குநா்கள் குழுவில் புதிய உறுப்பினராக தோ்வானாா். 16 இயக்குநா்கள் கொண்ட நிா்வாகக் குழுவில் பல்வேறு பத்திரிகைகளின் பதிப்பாளா்களும் பல்துறை பிரபலங்களும் உறுப்பினா்களாக உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT