இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

30th Sep 2022 03:26 PM

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.

அசோக் கெலாட் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் அக்டோபர் 8 ஆம் தேதி ஆகும்.

அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க: பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ADVERTISEMENT

அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே காங்கிரஸ் தலைவர் யார் என அற்விக்கப்படவுள்ளது

ADVERTISEMENT
ADVERTISEMENT