இந்தியா

67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

29th Sep 2022 08:35 PM

ADVERTISEMENT

நாட்டில் 67 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி,  வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 67 ஆபாச இணையதளங்கள் முடக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | 10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்

பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஆபாசத்தை பரப்பும் வகையிலும் செயல்பட்ட63  இணையதளங்களை முடக்க உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. 

ADVERTISEMENT

அதன்படி 67 ஆபாச இணையதளங்களை முடக்க இணைய நிறுவனங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செப்டம்பர் 29 அன்று உத்தரவிட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT