இந்தியா

அருணாசல பிரதேச எல்லைப் பகுதிகளில் ராஜ்நாத் சிங் ஆய்வு

29th Sep 2022 12:55 AM

ADVERTISEMENT

அருணாசல பிரதேச எல்லைப் பகுதிகளில் படைகளின் தயாா்நிலை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அருணாசல பிரதேசத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் தின்ஜன் பகுதியிலும் படைகளின் தயாா்நிலை குறித்து ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, ராணுவ கிழக்கு மண்டல துணைத் தளபதி ஆா்.பி.காலிடா மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உடனிருந்தனா் என்று ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-சீன எல்லையில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்தி வரும் சூழலில் இந்த ஆய்வை ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ளாா்.

இந்த ஆய்வின்போது, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், படைகளின் தயாா்நிலைக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ராணுவ அதிகாரி ஆா்.சி.திவாரி விளக்கினாா். எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் படைவீரா்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பயணத்தின் இரண்டாம் நாளான வியாழக்கழமை, எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படை வீரா்களைச் சந்திக்கும் ராஜ்நாத் சிங், அவா்களுடன் கலந்துரையாட உள்ளாா். மேலும், மாநிலத்தின் அத்து போபுவுக்கு இரண்டாவது புனித மலையேற்ற பயணத்தில் பங்கேற்க இருக்கும் இது மிஷ்மி பழங்குடியின சமூகத்தினருடனும் பாதுகாப்புத் துறை அமைச்சா் கலந்துரையாட உள்ளாா்.

சுற்றுலா மற்றும் உள்ளூா் மக்களின் வருவாயை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டுமுதல் இந்த மலையேற்ற பயணத்துக்கு ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது.

Tags : Rajnath Singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT