இந்தியா

பாஜகவில் இணைந்தார் ஹிமாசல் காங்கிரஸ் செயல் தலைவர்

DIN

ஹிமாசல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்ஷ் மகாஜன் பாஜகவில் இணைந்தார்.
 முன்னாள் மாநில அமைச்சரான ஹர்ஷ் மகாஜன், மறைந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் புதன்கிழமை பாஜகவில் இணைந்த ஹர்ஷ் மகாஜன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையைப் பாராட்டி பேசினார்.
 செய்தியாளர் சந்திப்பில் ஹர்ஷ் மகாஜன் கூறியதாவது: வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் மாநில காங்கிரஸின் தலைவராக உள்ளார். அவருடைய மகன் விக்கிரமாதித்ய சிங் எம்எல்ஏவாக உள்ளார். முன்னாள் முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநில காங்கிரஸில் எவ்வித மாற்றமும் இல்லை. மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொலைநோக்குப் பார்வை இல்லாமலும், பயணிக்கும் திசையை அறியாமலும், தலைமைத்துவம் இன்றியும் காணப்படுகிறது என்றார்.
 பாஜகவில் இணைந்த மகாஜனை வரவேற்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "மகாஜன் காங்கிரஸில் 40 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் காங்கிரஸில் இருந்தபோது முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மாநில பாஜக அரசும் அதனையே தொடரும். நிகழாண்டின் இறுதியில் நடைபெறும் ஹிமாசல் மாநிலப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT