இந்தியா

ஒடிசா இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு: 28 பேர் பாதிப்பு

29th Sep 2022 09:01 AM

ADVERTISEMENT

ஒடிசா இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு  ஏற்பட்டதில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னணி இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அம்மோனியா வாயு  கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்தத 28 தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதில் 9 பேர் அதிகளவு அம்மோனியா வாயுவை சுவாசித்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை: தமிழக அரசு அரசாணை

ADVERTISEMENT

2019 ஆம் ஆண்டு, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திள்ள இறால் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துவந்த 90 பேர், தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT