இந்தியா

திருப்பதி - திருமலை இடையே மின்சாரப் பேருந்து சேவை

27th Sep 2022 08:30 PM

ADVERTISEMENT


திருப்பதி - திருமலை இடையே  10 மின்சாரப் பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். 

பிரம்மோற்சவத்தையொட்டி முதல்கட்டமாக 10 மின்சார பேருந்துகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், 100 பேருந்துகள் இயக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

திருமலை - திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் இயக்கியுள்ளது. 

பிரம்மோற்சவத்தையொட்டி 10 மின்சார பேருந்துகளை முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்தார். டிசம்பர் மாதத்திற்குள் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

அலிபிரி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி மலைப்பாதை சாலையில் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதேபோன்று ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலைக்கு 14 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து மதனப்பள்ளிக்கு 12 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து நெல்லூருக்கு 12 பேருந்துகளும், கடப்பாவுக்கு 12 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT