இந்தியா

விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

26th Sep 2022 01:36 PM

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக் கோரிய நளினி, ரவிச்சந்திரன் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

இந்த ஏழு பேரில் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாக கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின்கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசும் தமிழக அரசும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மேல்முறையீடு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT