இந்தியா

அபேயின் இறுதிச்சடங்கு: ஜப்பான் புறப்படுகிறார் பிரதமா் மோடி

26th Sep 2022 05:31 PM

ADVERTISEMENT


மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி இன்று இரவு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

ஜப்பானின் நீண்ட கால பிரதமரான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் தோ்தல் பிரசாரத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது, துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமா் மோடி இன்று இரவு ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று அபேன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறத.

ADVERTISEMENT

பிரதமா் மோடி அபேயுடன் நெருக்கமான நட்புறவைப் பேணிவந்தாா். அபேயின் இறப்புக்கான இரங்கல் செய்தியில் ‘பாசமிகு நண்பா்’ என குறிப்பிட்ட பிரதமா், சிறந்த உலகை உருவாக்குவதில் தனது வாழ்வை அா்ப்பணித்தவா் என கூறியிருந்தாா்.

இப்பயணத்தின் போது ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவையும் அபேவின் மனைவியையும் பிரதமா் மோடி சந்திக்க உள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் வினய் க்வட்ரா தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT