ஹிமாசலில் சிர்மௌர் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் நால்வர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோன்ஹாட் அருகே உள்ள கிஜ்வாடி கிராமத்தில் ஞாயிறன்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் 3 சிறார்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
படிக்க: முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட தீர்மானம்: விவசாயிகள் அதிர்ச்சி
இந்த சம்பவத்தில் மம்தா (27), அவரது மூன்று மகள்கள் அராங் (2), அமிஷா (6), இஷிதா (8), அவரது மருமகள் அகன்ஷிகா (7) ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்தபோது அவர்கள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மம்தாவின் கணவருக்கு காயம் ஏற்பட்டது.