இந்தியா

அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாப்பாக உள்ளது: உத்தரகண்ட் முதல்வா் 

25th Sep 2022 09:26 PM

ADVERTISEMENT

அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாப்பாக உள்ளது என்று உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளார். 

உத்தரகண்ட் மாநிலம், கடந்த 18-ஆம் தேதி பெண் வரவேற்பாளா் அங்கிதா பண்டாரி சொகுசு விடுதிக்கு வந்த விருந்தினா்களுக்கு ‘சிறப்பு சேவை’ (பாலியல்) செய்ய மறுத்ததால், அந்த விடுதியின் உரிமையாளா் மற்றும் இரண்டு ஊழியா்களால் கொலை செய்யப்பட்டது முகநூல் நண்பா் ஒருவருடன் அந்தப் பெண் வரவேற்பாளா் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொண்ட உரையாடல் மூலமாக தெரியவந்தது.

இதையும் படிக்க- இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொலை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணின் உடல் சொகுசு விடுத்திக்கு அருகிலுள்ள ஓடையிலிருந்து சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த சொகுசு விடுதி ஹரித்வாா் பாஜக மூத்த தலைவரான வினோத் ஆா்யா என்பவரின் மகன் புல்கித் ஆா்யாவுக்கு சொந்தமானதாகும். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புல்கித் ஆா்யா மற்றும் விடுதியின் மேலாளா், உதவி மேலாளா் ஆகிய மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 

ADVERTISEMENT

கைதானவா்கள் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 

இந்த நிலையில் அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதை அழிக்க எந்த முயற்சியும் நடக்காது என்றும் உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி இன்று தெரிவித்துள்ளார். மேலும் கொலை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு ஒவ்வொரு கோணத்திலும் விசாரித்து வருவதாக குறிப்பிட்ட அவர் உத்தரகண்ட் மகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT