இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 2 குழந்தைகள் பலி

25th Sep 2022 04:10 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் புதிததாக கட்டப்பட்ட கார்த்திகேயா மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க- சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது

எனினும், இந்த விபத்தில் சிக்கி சித்தார்த்த ரெட்டி (12) மற்றும் கார்த்திகா (6) ஆகியோர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேசமயம் குழந்தைகளின் பெற்றோர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT