இந்தியா

நாளை (செப்.25) சோனியா காந்தியை சந்திக்கும் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ்

24th Sep 2022 04:07 PM

ADVERTISEMENT

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளனர்.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டதிலிருந்து நாடு முழுவதும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் தொடர்பாக பேச்சுகள் தீவிரமடைந்து வருகின்றன. 

இதையும் படிக்க | வீட்டுக் காவலில் சீன அதிபர்? இணையதளத்தில் பரவும் செய்தியால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பிகார் அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய நிதீஷ் குமாரின் கூட்டணி முறிவு எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ள நிலையில் பாஜகவிற்கு எதிரான அணியை ஏற்படுத்துவதில் லாலு பிரசாத் யாதவ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

கடந்த வாரம் பிகாரில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “2024 தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்குவோம். ராகுல் காந்தி தனது யாத்திரையை முடித்த பிறகு நிதீஷ் குமாருடன் தில்லி சென்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது: மெஹபூபா முஃப்தி

இந்நிலையில் நாளை தில்லியில் சோனியா காந்தியை லாலுபிரசாத் யாதவ்வும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் பரவி வரும் நிலையில் சோனியா காந்தியுடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT