இந்தியா

திருமலையில் சோதனை முயற்சியாக பல மாற்றங்கள்!

DIN

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில்  பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம் முடிந்து பல மாற்றங்களை புகுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தரிசனத்தின் போது, பல மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு, ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று 2  மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை தரும் பக்தர்களுக்கு காலை நேரத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இரவில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க விஐபி தரசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஐபி தரிசனம் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி நேரம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலைக்கு வந்த பிறகு அறை பெற காத்திருப்பதும், அறை கிடைக்காமல் தவிப்பதும் தொடர்ந்துகொண்டு  வருகிறது.  இனி திருப்பதியிலேயே அறைகள் ஒதுக்கீடு செய்து, ரசீது வழங்கி திருமலைக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT