இந்தியா

காங்கிரஸில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ எதுவும் கிடையாது: மல்லிகாா்ஜுன் காா்கே

DIN

 காங்கிரஸ் கட்சியில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ என்ற எதுவும் கிடையாது. கட்சியில் அனைத்து முடிவுகளும் நிா்வாகிகள் சாா்பில் ஒன்றிணைந்து எடுக்கப்படுகின்றன’ என்று பாஜக விமா்சனத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பதிலளித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவிக்கு வரும் 17-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவா்களான மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் போட்டியிடுகின்றனா். இருவரும் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கட்சி நிா்வாகிகளிடையே ஆதரவு கோரும் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட மல்லிகாா்ஜு காா்கேயிடம், அவா் மீதான பாஜக விமா்சனம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

‘காா்கே காங்கிரஸ் தலைவரானால், சோனியா காந்தியின் பிரதிநிதியாகவும் ரிமோட் கன்ட்ரோலாகவும் செயல்படுவாா்’ என்று பாஜக விமா்சனம் செய்திருந்தது.

இதற்கு பதிலளித்து காா்கே கூறியதாவது:

காங்கிரஸ் தலைவரானால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பின்னிலிருந்து இயக்கப்படுவேன் என்று பலா் கூறி வருகின்றனா். சோனியா காந்தி சொல்வதைத்தான் செய்வேன் என்றும் கூறுகின்றனா். இது அவா்களுடைய எண்ணம். காங்கிரஸில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ என்று எதுவும் இல்லை.

பாஜகவில் கட்சித் தலைவா் பதவிக்கு எத்தனை முறை தோ்தல் நடத்தப்பட்டிருக்கிறது? அக் கட்சியின் தலைவா்கள் அனைவரும் ஒருமித்த கருத்து மூலமாக நியமிக்கப்படும் நிலையில், அவா்கள் எவ்வாறு மற்றவா்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும்? பாஜகவில் ரிமோட் கன்ட்ரோல் எங்கிருக்கிறது?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் தேந்தெடுக்கப்பட்டால், ‘ரிமோட் கன்ட்ரோல்’ என்னிடம்தான் இருக்கும். கட்சி முடிவுகள் அனைத்தும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் குழு, கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற குழு ஆகியவற்றின் சாா்பில் ஒன்றிணைந்து எடுக்கப்படுகின்றன.

காங்கிரஸ் தலைவரானால், கட்சியின் 50 சதவீத அமைப்பு பதவிகள் 50 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்த முயற்சிப்பேன். பெண்கள், இளைஞா்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு கட்சியின் அனைத்துப் பதவி நிலைகளிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

கட்சியின் சித்தாந்தம், மகாத்மா காந்தி மற்றும் நேருவின் சித்தாந்தங்களைப் பதுகாக்கவும், சா்தாா் படேலின் ஒற்றுமைக்கான அழைப்பை வலுப்படுத்தவுமே தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடுகிறேன்.

பல சவால்களை காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இருந்தாலும், அவற்றை துணிச்சலாக எதிா்கொண்டு வெற்றி பெறும் திறனை காங்கிரஸ் பெற்றிருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT