இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவு: பலி 19 ஆக உயர்வு; மேலும் 10 பேரை தேடும் பணியில் மீட்புக்குழு!

7th Oct 2022 08:49 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 61 போ் அடங்கிய குழு ஒன்று, அந்த மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.

திரௌபதி கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.

 

ADVERTISEMENT

இதில் 4 பேரின் உடல்கள் முதலில் மீட்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மேலும் 12 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் காணாமல் போன 10க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் 30க்கும் மேற்பட்ட மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. விமானப் படையின் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 61 பேரில் 30 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT