இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!

7th Oct 2022 10:28 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் புதிதாக 1,997 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,06,460 ஆக உள்ளது, அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 30,362 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,353 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,47,344 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.74 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 32,282 ஆக உள்ளது. 

இதையும் படிக்க | ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீா்மானம்

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 9 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,754 ஆக உயர்ந்துள்ளது, இதில் கேரளத்தில் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 1 ஆக உள்ளது.

ADVERTISEMENT

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாட்டில் இதுவரை 2,18,88,17,589 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 3,97,407 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு 2020 ஆகஸ்ட் 7 இல் 20 லட்சமாகவும், ஆகஸ்ட் 23 இல் 30 லட்சமாகவும், செப்டம்பர் 5 இல் 40 லட்சமாகவும், செப்டம்பர் 16 இல் 50 லட்சத்தைத்  தாண்டியது.

செப்டம்பர் 28 இல் 60 லட்சமாகவும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபர் 29 இல் 80 லட்சமாகவும், நவம்பர் 20 இல் 90 லட்சமாக அதிகரித்து, டிசம்பர் 19 இல் ஒரு கோடியைத் தாண்டியது.

கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இரண்டு கோடி மற்றும் ஜூன் 23 ஆம் தேதி மூன்று கோடி என்ற மோசமான மைல்கல்லை கடந்தது. 2022 ஜனவரி 25 இல் நான்கு கோடியைத் தாண்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான ஆறு புதிய இறப்புகளில் சத்தீஸ்கரில் இருந்து இரண்டு பேர் மற்றும் கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா ஒருவர் அடங்குவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT