இந்தியா

உத்தரகண்ட் மீட்புப் பணியில் சிக்கல்: 16,000 அடி உயரத்தில் களமிறங்கும் சிறப்புப் படை

6th Oct 2022 12:19 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக 16,000 அடி உயரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள சிறப்புக் குழுவினர் சென்றுள்ளனர்.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 41 பேரைக் கொண்ட குழு ஒன்று, அம்மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.

அம்மலையின் கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

இதில், 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 29 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 48 மணிநேரம் கடந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 16,000 அடி உயரத்தில் ராணுவ ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சோதனை தரையிறக்கமும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் மலையேற்றப் பயிற்சிப் பெற்ற வீரர்கள் 16,000 அடி உயரத்தில் தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், அடுத்த மூன்று நாள்களுக்கு பனிச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலையேற்றப் பயிற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT