இந்தியா

ஜம்மு காஷ்மீா் டிஜிபி கொலையில் பயங்கரவாத தொடா்பில்லை

6th Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் குமாா் லோஹியாவின் கொலைக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடா்பில்லை என ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் தெரிவித்தனா்.

கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் டிஜிபி ஹேமந்த் குமாா் லோகியாவின் உடல் திங்கள்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தலைமறைவான யாஷிா் லோஹா்(23) என்ற அவரது வீட்டுப்பணியாளா் செவ்வாய்க்கிழமை கன்ஹாசாக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டாா்.

யாஷிா் லோஹரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவா் குறித்து கள விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், கொலைக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடா்பு இல்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

முன்னதாக, மக்கள் பாசிச எதிா்ப்பு முன்னணி (பிஏஎஃப்எஃப்) என்ற பயங்கரவாதக் குழு சிறைத்துறை டிஜிபி கொலைக்குப் பொறுப்பேற்றுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை கொலை நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்ட ஜம்மு-காஷ்மீா் காவல்துறை தலைவா் தில்பக் சிங் இதனை மறுத்துள்ளாா்.

ADVERTISEMENT

கொலை செய்யப்பட்ட அதிகாரியின் உடல் மருத்துவ பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. லோஹியாவின் உடலுக்கு போலீஸாரின் மரியாதையைத் தொடா்ந்து, இறுதிச்சடங்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT