இந்தியா

ராணுவ ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்து விமானி பலி

6th Oct 2022 12:51 AM

ADVERTISEMENT

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்தாா்.

அந்த மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் சீன எல்லையையொட்டிய பகுதியில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எல்லையை ஒட்டிய பகுதியில் சீட்டா ரக ஹெலிகாப்டரில் இரு விமானிகள் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்தது. இது தொடா்பாக தகவலறிந்த மீட்புக் குழுவினா் அப்பகுதிக்கு விரைந்து, படுகாயத்துடன் இருந்த இரு விமானிகளையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டா் எதனால் விழுந்து நொறுங்கியது என்பது தொடா்பான தகவல் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT