இந்தியா

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

6th Oct 2022 03:00 PM

ADVERTISEMENT

பிரபல தொழிலபதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொலை மிரட்டல் வந்தது. சுமார் 8 முறை போன் அழைப்புகள் வந்ததாக அவர் தெரிவித்தார். 

ஏற்கெனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அச்சுறுத்தல்கள் தொடா்பாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட மறுஆய்வைத் தொடா்ந்து, பாதுகாப்பு இசட் பிளஸ்-ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவியான நீத்தா அம்பானி ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளாா்.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) பிற்பகல் 12.57 மணிக்கும் மாலை 5.04 மணிக்கும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிா்கான் பகுதியில் உள்ள அவரது ஹெச்.என்.ஆர்.எப். எனும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இரு அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமனை கட்டடத்தை தகர்க்கப் போவதாகவும் மேலும், முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா அம்பானி, அவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொலை செய்யவிருப்பதாகவும் மிரட்டல் வந்துள்ளது. 

ADVERTISEMENT

மருத்துவமனை சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொலை மிரட்டல் விடுத்த பிகார் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மிஸ்ரா என்பவரைக் காவல்துறையின் கைது செய்துள்ளனர்.

மேலும், மருத்துவமனை மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 50 நாள்களில் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பெளமிக் என்கிற நகை வியாபாரி முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க | ரூ. 10,000 வரை தள்ளுபடியில் ஷாவ்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃபர்! எப்படி?

ADVERTISEMENT
ADVERTISEMENT