இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்

5th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பனிச்சரிவில் சிக்கியவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியதாக கூறியிருப்பதாவது: “ நாம் விலைமதிப்பில்லாத பல மலையேற்ற வீரர்களை இழந்துள்ளோம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பனிச்சரிவில் சிக்கியவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது”. எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உத்தரகண்ட் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்களில் 10 பேர் பலி

ADVERTISEMENT

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதில், உத்தரகண்ட் மாநில பனிச்சரிவு விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது மனதிற்கு வேதனையளிக்கிறது. அவர்களது நினைவால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பனிச்சரிவில் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT