இந்தியா

பழனி - கொடைக்கானல் மலைத்தொடர்ச்சி இடையே ரோப் கார் சேவையா? மத்திய அரசு திட்டம்

5th Oct 2022 02:34 PM

ADVERTISEMENT

ஸ்ரீநகரில், சங்கராச்சாரியா கோயில், கர்னூல் மாவட்டம் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஸ்ரீசைலம் ஜோதிலிங்கம் கோயில், பழனி - கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்குப் பகுதி என சுமார் 18 இடங்களில் மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த 18 திட்டங்களில் ஒன்றான, உஜ்ஜைன் மஹாகாளேஷ்வர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் திட்டம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையும் படிக்க.. அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால்.. சென்னை மாநகராட்சியின் செம்ம ஆஃபர்

இதற்கு முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் வாராணசியில் ரோப் கார் சேவைக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருந்தன. ஒன்று கேதார்நாத் கோயிலுக்கும் மற்றொன்று உத்தரகண்டில் உள்ள ஹேம்குந்த் சாஹிப் கோயிலுக்கும். இவைகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த 18 ரோப் கார் திட்டங்களும், தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், ஜம்மு -காஷ்மீர், திரிபுரா, அருணாசலம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் குறிப்பாக தமிழகத்தில் பழனி மலைக் கோயில் முதல் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்குப் பகுதி வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கும் திட்டமும் மத்திய அரசின் கைவசம் உள்ளது. இதுதான் மிக நீண்ட தூர ரோப் கார் திட்டமாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை அமையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரோப் கார் சேவை சுற்றுலாவை சிறப்பாகவும், சிறப்பான போக்குவரத்தாகவும் அமைவதால், மலைப் பகுதிகளில் ரோப் கார் சேவையை தொடங்குவதால், அந்தந்த மாநிலங்களின் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல, மேலும் நாசிக் முதல் திரியம்பகேஸ்வரர் கோயில் வரை ரோப் கார் அமைப்பதற்கான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. மேலும், மக்கள் நடந்து செல்ல சிரமப்படும் மலைக் கோயில்களுக்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT