இந்தியா

மக்களுக்கு கோழியும், மதுபாட்டிலும் அளித்த ஆளும்கட்சி நிர்வாகி: வைரலாகும் விடியோ

4th Oct 2022 04:44 PM

ADVERTISEMENT

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி ஒருவர் மக்களுக்கு கோழியும், மதுபாட்டில்களும் வழங்கிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தசரா விழாவையொட்டி, வாரங்கல் கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பொதுமக்கள் 200 பேருக்கு உயிருடன் இருக்கும் முழு கோழி ஒன்றும், மதுபாட்டில் ஒன்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி ராஜனாலா ஸ்ரீஹரி வழங்கியுள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நாளை புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவதால், இந்த நிகழ்ச்சியை ராஜனாலா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு கோழியும், மதுபாட்டில்களும் வழங்கும் நிகழ்ச்சியின் பின்புறம், முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அமைச்சர் கேடி ராமா ராவ் ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கிறார் சந்திரசேகர் ராவ்?

இந்த முழுக் காணொலியும் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT