இந்தியா

கர்பா நடனம் ஆடிய மகன் திடீர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தந்தையும் மரணம்! 

3rd Oct 2022 04:33 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிக் கொண்டிருந்த மகன் திடீரென உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தந்தையும் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியில் இரட்டை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக கர்பா நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எவர்ஷைன் நகரில் உள்ள குளோபல் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் மனிஷ் நராப்ஜி சோனிக்ரா (35) என்பவர் கர்பா ஆடிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தந்தையும் இருந்தார். 

படிக்க: இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ADVERTISEMENT

இந்நிலையில் மணீஷ் திடீரென நடனம் ஆடியபடியே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதையறிந்து அதிர்ச்சியடைந்த, அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (66) அந்த இடத்திலேயே அவரும் உயிரிழந்தார்.

இதன்பின்னர், இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை விரார் நகரில் இறந்த தந்தை-மகன் இருவரின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.  இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 
 

Tags : shock Garba
ADVERTISEMENT
ADVERTISEMENT