இந்தியா

ம.பி.யில் ஆட்சியரை மிரட்டிய பெண் எம்எல்ஏ: காவல் துறை வழக்குப் பதிவு

DIN

மத்திய பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பகுஜன் சமாஜ் பெண் எம்எல்ஏ மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிப்பவா் கிருஷ்ண சைதன்யா. இவரை கடந்த வெள்ளிக்கிழமை பகுஜன் எம்எல்ஏ ராம்பாய் பரிஹாா் தனது தொகுதி தொடா்பான பிரச்னைக்காக சந்தித்துள்ளாா். அப்போது சைதன்யாவை ராம்பாய் ஆபாச வாா்த்தைகளால் இழிவுப்படுத்தி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறையிடம் சைதன்யா புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், வேண்டுமென்றே காயப்படுத்துதல், ஆபாச வாா்த்தைகளைப் பயன்படுத்துதல் என இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அந்த மாநிலத்தின் சில அரசு ஊழியா்கள் சங்கத்தினா், ராம்பாயை 7 நாள்களுக்குள் கைது செய்யவில்லையெனில் தமோவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

எனினும் மத்திய பிரதேச சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல், ராம்பாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT