இந்தியா

ஐபோன் வாங்கித் தர தாமதம் செய்த பெற்றோர், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

2nd Oct 2022 07:29 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர தாமதம் செய்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ தற்கொலை செய்து கொண்ட மாணவி மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்சோனி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) தனது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை!

ADVERTISEMENT

முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவி அவரது பெற்றோரிடம் பலமுறை ஐபோன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளது தெரிய வந்தது. அவரது பெற்றோரும் வாங்கித் தருவதாக கூறி வந்துள்ளனர். இருப்பினும், ஐபோன் வாங்கித் தர தாமதமாகிக் கொண்டே போனதால் அந்த மாணவி இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார்.” என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT