இந்தியா

இனி 'ஹலோ'க்கு பதிலாக 'வந்தே மாதரம்': மகாராஷ்டிர அரசு

DIN

மகாராஷ்டிர அரசு அனைத்து அரசு அதிகாரிகளும் குடிமக்களிடமிருந்து அழைப்புகளைப் பெறும்போது 'ஹலோ' என்று கூறுவதற்குப் பதிலாக 'வந்தே மாதரம்' என்று வாழ்த்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது. 

இன்று மகாராஷ்டிர அரசு ஒரு அரசாங்கத் தீர்மானத்தை  வெளியிட்டது. அனைத்து அரசு அதிகாரிகளும் குடிமக்களிடமிருந்து அழைப்புகளைப் பெறும்போது 'ஹலோ' என்று கூறுவதற்குப் பதிலாக 'வந்தே மாதரம்' என்று வாழ்த்துவதைக் கட்டாயமாக்கியது. இந்த தீர்மானம் அமிர்த மஹோத்சவின் ஒரு பகுதியாக அக்டோபர் 2 முதல் அமலுக்கு வருகிறது.

பொது நிர்வாகத் துறையின் தீர்மானத்தின்படி, இந்த மாற்றத்தை வெற்றிகரமாகச் செய்ய தங்கள் குழுக்களை ஊக்குவிக்குமாறு மாநில அதிகாரிகளும் துறைத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது, மகாராஷ்டிர எம்.எல்.ஏ. சுதிர் முங்கண்டிவார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாநில அமைச்சரவை இலாகாக்களை பகிர்ந்தளித்த உடனேயே இந்த உத்தரவை முன்மொழிந்தார். அவர் தனது முதல் முடிவுகளில் ஒன்றாக அந்த அறிக்கையை வெளியிட்டதும் குறிப்பிட்டத்தக்கது.

“ஹலோ என்பது மேற்கத்திய பண்பாடு. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. எந்த உணர்வும் இல்லை. பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பல்லாயிரக்கணக்கான சுதந்திர வீரர்கள் பாடிய பாடல். இதனால் பாசிட்டிவ் எனர்ஜி வரும். மேலும் வந்தே மாதரம் இந்தியாவை பெருமை கொள்ள செய்யும்.  துறைத் தலைவர்கள் அவர்களது துறையிலுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இதை செயல்படுத்த வேண்டுமென” என தற்போது சுற்றறிக்கையில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

"நாடு சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடுகிறது, அதன் பொருத்தத்திற்கு ஏற்ப, அரசு ஊழியர்கள் இனி வணக்கம் பயன்படுத்தாமல், வந்தே மாதரம் என தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது" என்று பாஜக தலைவர் சுதிர் முங்கண்டிவார் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT