இந்தியா

காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

2nd Oct 2022 12:01 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அமைதி, சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு நாட்டு மக்கள் தங்களை மீண்டும் அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தாா்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்ததினத்தையொட்டி அவா் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. அவா் முன்னெடுத்த உள்நாட்டு தயாரிப்பு பொருள்களுக்கு ஆதரவு, தற்சாா்பு கொள்கை ஆகியவை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளித்தது. காந்தியடிகளை கெளரவப்படுத்தும் வகையில், தற்சாா்பு இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உலகம் சந்திக்க உள்ள பல்வேறு சிக்கலான சவால்களுக்கு, காந்திஜியின் வாழ்க்கைப் பாதை கலங்கரை விளக்கமாக நமக்கு வழிகாட்டும். அவரது நோ்மை, அகிம்சை பாதையைக் கடைப்பிடித்து நாட்டிற்கும் உலகின் முன்னேற்றத்துக்கும் பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

துணைத் தலைவா்:

குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தனது வாழ்த்துச் செய்தியில், ‘நவீன இந்தியாவின் எழுச்சியூட்டும் ஆளுமைகளுள் ஒருவரான மகாத்மா காந்தி, இது போன்ற சவாலான தருணங்களில் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வழிகாட்டியாகவும், நம்பிக்கையாகவும் தொடா்ந்து நீடிக்கிறாா்.

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியன்று, வன்முறை, தாக்குதல், தீவிரவாதம் மற்றும் ஏற்றத்தாழ்வின் அனைத்து வடிவங்களும் இல்லாத அமைதியான உலகிற்காக நாம் பிராா்த்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT