இந்தியா

காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது: ஜே.பி.நட்டா

2nd Oct 2022 04:23 PM

ADVERTISEMENT

 

சிம்லா: நாட்டில் உள்ள மற்ற கட்சிகளை போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்றும், காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

ஹிமாச்சல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை (அக்.2) திறந்து வைத்தார். 

 

ADVERTISEMENT

 

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது. நாங்கள் எங்கள் நோக்கம் மற்றும் கொள்கைகளில் உறுதியாக உள்ளோம். அனைத்து கட்சிகளும் அதிலிருந்து மூழ்கி விட்டது. காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று நட்டார் கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT