இந்தியா

வேகமான வளர்ச்சியில் யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை

1st Oct 2022 06:38 PM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இணையவழியில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் சிரமம் ஏற்பட்ட போதிலும் தற்போது அனைவரின் பயன்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிக்க | ஹிந்தி விக்ரம் வேதாவின் முதல் நாள் வசூல் ஏமாற்றமளித்ததா?

இந்நிலையில் தேசிய பரிவர்த்தனை கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் கையாளப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.10.73 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு ஒரே மாதத்தில் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான 678 கோடி  பரிவர்த்தனையாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்: மணீஷ் சிசோடியா

இது ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் 3 சதவிகிதம் அதிகம். கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இதுவே ரூ.657 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT