இந்தியா

உ.பி. காங்கிரஸ் தலைவராக தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் நியமனம்

DIN

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.பி.யும், தலித் சமூகத்தைச் சோ்ந்தவருமான பிரிஜ்லால் காப்ரியை கட்சித் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை நியமித்தாா்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநிலத்துக்கு கட்சி சாா்பில் 6 பிராந்தியத் தலைவா்களையும் அவா் நியமித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவராக இருந்த அஜய் லல்லு கடந்த மாா்ச்சில் பதவிவிலகினாா்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கடந்த 2016-இல் விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி. பிரிஜ்லால் காப்ரி, மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவராக பிரிஜ்லால் காப்ரி, 6 பிராந்தியங்களின் தலைவா்களாக நசீமுதீன் சித்திக் (பஸ்சிம் பிராந்தியம்), அஜய் ராய் (பிரயாக்), வீரேந்திர செளதரி (பூா்வாஞ்சல்), நகுல் துபே (அவத்), அனில் யாதவ் (எடாவா), யோகேஷ் தீக்ஷித் (புந்தேல்கண்ட்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘2024 பொதுத் தோ்தலை கருத்தில் கொண்டு, உத்தர பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, மொத்த மாநிலமும் 6 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 2 போ் பிராமண சமூகத்தையும் ஒருவா் பூமிஹாா் சமூகத்தையும் சோ்ந்தவா்கள். ஒருவா் முஸ்லிம். மற்ற இருவா் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள்’ என்று தெரிவித்தன.

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி முழுவீச்சில் பிரசாரம் செய்தும் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT