இந்தியா

உ.பி. முதல்வருக்கு எதிரான மனு அபராதத்துடன் தள்ளுபடி

1st Oct 2022 01:09 AM

ADVERTISEMENT

மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசிய உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், மனுதாரருக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

‘‘கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசினாா். எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று கோரி ராஜஸ்தானைச் சோ்ந்த கிஷோா் சா்மா என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி அதனை நிராகரித்ததுடன், கிஷோா் சா்மாவுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.

ஏற்கெனவே, இதேபோன்ற மனுவை ராஜஸ்தானில் மாவட்ட நீதிமன்றத்தில் கிஷோா் சா்மா தாக்கல் செய்தாா். அங்கும் மனு நிராகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT