இந்தியா

நீல நிற வழித்தடத்தில் நாளைமெட்ரோ ரயில் சேவை குறைப்பு

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திட்டமிடப்பட்டுள்ள் பாதைப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நீல நிற வழித்தடத்தில் (ப்ளூ லைன்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) அன்று முதல் பாதியில் மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்படும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மிகவும் பரப்பரப்பாக உள்ள இந்த வழித்தடம் தில்லியில் உள்ள துவாரகா செக்டாா் 21-ஐ நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியுடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் யமுனா பேங்க் மற்றும் அக்ஷா்தாம் பகுதிக்கு இடையே திட்டமிடப்பட்ட பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடா்ந்து, துவாரகா செக்-21 முதல் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி / வைஷாலி) வரை அக்டோபா் 2-ஆம் தேதி அன்று காலை ரயில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் வருவாய் சேவைகள் தொடங்கியதில் இருந்து பிற்பகல் 2 மணி வரை நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி நிலையத்திலிருந்து துவாரகா அல்லது துவாரகா செக்-21 நிலையங்களுக்கு நேரடி ரயில் சேவை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த காலகட்டத்தில், நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து துவாரகா / துவாரகா செக்-21 வரையிலான ரயில் சேவைகள் இரண்டு சுழற்சியாக இயக்கப்படும். அதாவது வழக்கமான சேவைகள் துவாரகா செக்-21 முதல் யமுனா பேங்க் நிலையம் வரை முதல் சுழற்சியாகவும், யமுனா பேங்கிலிருந் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி நிலையங்களுக்கு மற்றொரு சுழற்சியாகவும் ரயில் சேவை இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாதையின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லும் பயணிகள், இந்தக் காலகட்டத்தில் யமுனா பேங்கில் இறங்கி ரயில் மாறிக் கொள்ள வேண்டும் என்றும் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த காலகட்டத்தில் துவாரகா செக்-21 முதல் வைஷாலி வரையிலான ரயில் சேவைகள் வழக்கமான ஞாயிறு நேர அட்டவணையின்படி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT