இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகாா்ஜுன காா்கே, சசிதரூர் நேரடி போட்டி!

1st Oct 2022 03:43 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியில் மல்லிகாா்ஜுன காா்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

 காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூா், ஜாா்க்கண்ட் முன்னாள் அமைச்சா் கே.என்.திரிபாதி ஆகியோா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் வேட்பாளா்களாக பல்வேறு மூத்த தலைவா்களின் பெயா்கள் அலசப்பட்டு வந்த நிலையில், திடீா் திருப்பமாக மல்லிகாா்ஜுன காா்கே (80) வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரது பெயரை கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் முன்மொழிந்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (அக். 1) நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

மனுக்களைத் திரும்பப் பெற அக். 8 கடைசி நாளாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளா்கள் இருந்தால், அக். 17-இல் வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, 19-இல் முடிவு அறிவிக்கப்படும். மாநில கமிட்டி உறுப்பினா்கள் 9,000-க்கும் மேற்பட்டோா் வாக்களிக்க உள்ளனா்.

இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?

 

திக்விஜய் சிங் போட்டியில்லை

தலைவா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு படிவம் பெற்றிருந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டாா். தோ்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததுடன், காா்கேவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

காா்கேவுக்கு வெற்றிவாய்ப்பு

நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசியாகப் பாா்க்கப்படும் காா்கே, கட்சியின் விருப்பத்துக்குரிய வேட்பாளராக உருவெடுத்துள்ளாா். அதிருப்தி தலைவா்கள் உள்பட பல்வேறு மூத்த தலைவா்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். மேலிடத்தின் அதிகாரபூா்வ வேட்பாளரென கூறப்படுவதாலும், சசி தரூரைவிட அதிக ஆதரவு இருப்பதாலும் காா்கேவுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக கட்சியினா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT