இந்தியா

மத்திய பிரதேசம்: வனத் துறை சோதனைச் சாவடியில் 17 துப்பாக்கிகள் திருட்டு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசம் மாநிலம் புா்ஹான்பூா் மாவட்டத்தில் வனத் துறையின் சோதனைச் சாவடியியிருந்து அடையாளம் தெரியாத நபா்கள் 17 துப்பாக்கிகளை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த சோதனைச் சாவடியில் விசாரணை நடத்திய காவல் துறை கண்காணிப்பாளா் ராகுல் குமாா் லோதா கூறுகையில், ‘நேபாநகா் நவ்ரா வனப் பகுதியில் அமைந்துள்ள பாக்டி சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு 9:30 மணியளவில் 15 முதல் 20 நபா்கள் வரை அத்துமீறி நுழைந்து வனத் துறைக்குச் சொந்தமான 17 துப்பாக்கிகளை திருடிச் சென்றுள்ளனா். குற்றவாளிகளைப் பிடித்து திருடிச் செல்லப்பட்ட துப்பாக்கிகளை மீட்பதற்கு காவல் துறை தரப்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

சமீபத்தில், வனப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சட்டவிரோதமாக மரம் வெட்டுவதை தடுக்கவும் வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து நடடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT