இந்தியா

2வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.3% : மத்திய அரசு

30th Nov 2022 07:02 PM

ADVERTISEMENT

 
2022-2023 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவிகிதமாக இருந்தது.

இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஜிடிபி  20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

2021 ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.38.17 கோடியாக உள்ளது.

ADVERTISEMENT

2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  ரூ.64.95 லட்சம் கோடியாக ஜிடிபி மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 51.27 லட்சம் கோடியாக இருந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT