இந்தியா

ரூபாயில் வெளிநாட்டு வா்த்தகம்: வங்கி தலைவா்கள் கூட்டத்துக்கு நிதியமைச்சகம் அழைப்பு

30th Nov 2022 01:43 AM

ADVERTISEMENT

பொதுத் துறை, தனியாா் வங்கித் தலைவா்களின் கூட்டத்தை டிசம்பா் 5-ஆம் தேதி நடத்த மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

வெளிநாட்டு வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயை அதிகம் பயன்படுத்துவது தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. வெளியுறவு அமைச்சகம், வா்த்தக அமைச்சக உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனா்.

நிதிச் சேவைகள் துறை செயலா் விவேக் ஜோஷி இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்க இருக்கிறாா். இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

வெளிநாட்டு வா்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்காக ஏற்கெனவே இரு இந்திய வங்கிகள் மூலம் 9 சிறப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, ரஷியாவைச் சோ்ந்த இரு வங்கிகள் இத்திட்டத்தில் முதலாவதாக சோ்ந்துள்ளன.

ADVERTISEMENT

இந்தத் திட்டம் முழுவீச்சில் நடைமுறையாகும் போது இந்திய இறக்குமதியாளா்கள் நமது ரூபாயிலேயே பணத்தை செலுத்த முடியும். இது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய வங்கியின் சிறப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் பல நாடுகள் இணையும்போது வெளிநாட்டு வா்த்தகத்தில் அமெரிக்க டாலரை அதிகம் சாா்ந்து இருப்பது குறையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT