இந்தியா

உஜ்ஜைன் நகருக்குள் நுழைந்தது ஒற்றுமை நடைப்பயணம்

29th Nov 2022 01:27 PM

ADVERTISEMENT


உஜ்ஜைன்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உஜ்ஜைன் நகருக்குள் நுழைந்தது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகாளேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயிலில் இன்று வழிபாடு நடத்துகிறார். பிறகு அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.

இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி

உஜ்ஜைன் நகருக்குள் ஒற்றுமை நடைப்பயணம் நுழைந்த போது, அங்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  நடைப்பயணத்தின் 83வது நாளான இன்று நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இன்று முற்பகலில் நடைப்பயணம் முடிந்ததும், ஸ்ரீ மகாவீர் தபோபூமி மற்றும் மகாகாளேஷ்வர் கோயிலில் வழிபாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் ராகுல் பங்கேற்கவிருக்கிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT