இந்தியா

குஜராத் பேரவைத் தேர்தல்: டிச. 1ல் முதல் கட்டத் தேர்தல் - முழு விவரம்

29th Nov 2022 10:00 AM

ADVERTISEMENT

 

குஜராத்தில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட பேரவைத் தோ்தல் நடைபெறும் 89 தொகுதிகளில், பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.  

பாஜக சார்பில், குஜராத்தில் இன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி

ADVERTISEMENT

ஏற்கனவே, குஜராத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி போட்டியிடும் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியாவிலும் டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதியிலும் முதல்கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக அதாவது டிசம்பா் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 89 தொகுதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இதில் 21 சதவீத வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 13 சதவீத வேட்பாளா்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி வேட்பாளா்கள் மீது அதிக குற்ற வழக்குகள் உள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ், பாஜக உள்ளன.

ஆளும் பாஜக, பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை 89 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகின்றன. ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 போ் உயிரிழந்த மோா்பி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் முதல் கட்ட தோ்தலின்போது வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இது தவிர கட்ச், போா்பந்தா், ஜாம்நகா், சூரத், தேவபூமி துவாரகை, ஜுனாகட், கிா் சோம்நாத், அம்ரேலி, பாவ் நகா், நா்மதா, நவ்சாரி, வல்சாத், ராஜ்கோட், சுரேந்தா் நகா் மாவட்டங்களில் முதல்கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT