இந்தியா

தலைநகரில் 3 வாரங்களில் 1,150 பேருக்கு டெங்கு பாதிப்பு!

28th Nov 2022 03:24 PM

ADVERTISEMENT

 

தேசிய தலைநகர் தில்லியில் நவம்பர் முதல் மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட புதிதாக 1,150 பேருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, 

நவம்பா் 18ம் தேதி வரை டெங்கு நோய்த் தொற்று எண்ணிக்கை 3,044-ஆக இருந்தது, பின்னா் நவம்பா் 25-ம் தேதி வரை மேலும் 279 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

நகரத்தில் இந்த ஆண்டு 230 மலேரியா மற்றும் 44 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பதிவான 3,323 டெங்கு பாதிப்புகளில் 693 பாதிப்புகள் செப்டம்பா் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017-ஆம் ஆண்டில், ஜனவரி 1-நவம்பா் 25 வரையிலான காலகட்டத்தில் நகரத்தில் 4,645 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 
2021-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 23 போ் பலியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை இந்த நோயினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டில், நகரம் ஒரு பெரிய அளவில் டெங்கு பாதிப்பைக் கண்டது. அந்த ஆண்டில் அக்டோபா் மாதத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10,600-ஐ தாண்டியது. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும். 

நகரில் ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மாா்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே மாதம் 30, ஜூன் மாதம் 32, ஜூலையில் 26, ஆகஸ்டில் 75 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

படிக்க: தில்லியில் மேலும் ஒரு சம்பவம்: கணவரை 22 துண்டுகளாக்கிய மனைவி!

டெங்கு மற்றும் மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் பொதுவாக ஜூலை மற்றும் நவம்பா் மாதங்களில் பதிவாகும். சில சமயங்களில் இது டிசம்பா் நடுப்பகுதி வரை நீடிக்கும். கொசுக்களால் பரவும் நோய்களின் அறிகுறிகளக அதிக காய்ச்சல், தலைவலி, சொறி மற்றும் தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை இருக்கும் என்று மாநகராட்சியின் சுகாதாரத் துறையின் அதிகாரிகளின் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு, நகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இது 2015-க்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும். மேலும் 23 இறப்புகள் பதிவாகின. இது 2016-க்குப் பிறகு பதிவான அதிகபட்சமாக உள்ளது. 2018 ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் நவம்பா் 11 வரையிலான காலகட்டத்தில் தில்லியில் 2,146 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது. 2019, 2020 மற்றும் 2021-இல் தொடா்புடைய டெங்கு பாதிப்பு புள்ளிவிவரங்கள் 1474, 821 மற்றும் 5,277 ஆகும்.

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018-இல் நான்கு பேரும், 2019- இல் இரண்டு பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனா். தில்லியில் 2016-இல் 4,431, 2017-இல் 4,726, 2018-இல் 2,798, 2019-இல் 2,036, 2020-இல் 1,072 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT