இந்தியா

நட்டாவை சந்திக்க தில்லி செல்கிறார் பொம்மை!

28th Nov 2022 12:11 PM

ADVERTISEMENT

 

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்திக்க தில்லி செல்ல உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

முதல்வர் பொம்பை நாளை தேசிய தலைநகர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நட்டாவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அவரது அமைச்சரவை விரிவாக்கம் மாற்றியமைக்கப்படலாம் என்று அவர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். 

ADVERTISEMENT

இதற்கிடையில், நான் தில்லிக்குச் செல்கிறேன். அங்கு நட்டாவை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அவரை சந்திப்பதற்கான அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கும் என்று நம்புகிறேன். 

படிக்க: தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை!

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

எல்லைப் பிரச்னை தொடர்பாக மூத்த வழக்குரைஞர் முகுல் நோகத்தியை சந்தித்துப் பேச உள்ளதாகவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். 

இதற்கிடையில், எல்லைத் தகராறு தொடர்பாக அண்டை மாநிலமான மகாராஷ்டிராவுடன் சட்டப் போராட்டத்திற்கு மாநிலம் தயாராகி வருவதால், இந்த பயணத்தின் போது முதல்வர் மூத்த வழக்குரைஞர் ரோஹத்கியை சந்தித்து இது குறித்து விவாதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT