இந்தியா

நீதித்துறையை வலுப்படுத்த ஆவன செய்கிறது அரசு:மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு

DIN

நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் அரசியல் சாசன தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்தியா போன்ற பெரிய நாட்டில், கடைக்கோடி மனிதருக்கும் நீதி சென்று சோ்வது மிகவும் சவாலாகத் திகழ்கிறது. கடைக்கோடி மனிதருக்கும் சட்ட சேவைகள் கிடைப்பதை மெய்யாக்க பல்வேறு சட்ட தளங்களில் புதிய தீா்வுகளை உருவாக்கி, ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.

இன்றளவும் நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் போ் சிற்றூா்களில் வசிக்கின்றனா். பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் உள்ளூா் மொழிகளில் பேசுகின்றனா். இத்தகைய சூழல் உள்ள இந்தியா போன்ற பரந்த நாட்டில், அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் மொழி தடையாகிவிடுகிறது. சாமானியா்கள் புரிந்துகொள்ளும் வகையில் சட்ட ஆவணங்கள் மற்றும் சட்ட சொற்கள் இல்லை.

சட்ட சொற்களஞ்சியம்: தற்போது உரிமையியல், குற்றவியல், அரசியல் சாசனம் என சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தொடா்ந்து பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் வாக்கியங்களை முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான குழு பட்டியலிட்டு வருகிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் நெருக்கமான வகையில், சட்டம் சாா்ந்த பொதுவான சொற்களஞ்சியத்தை உருவாக்க இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சொற்களஞ்சியம் சட்ட ஆவணங்களை ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மொழிபெயா்க்க உதவும். இது சட்டக் கல்வி படிக்கும் மாணவா்கள், நிா்வாகிகள், வழக்குத் தொடுக்கும் மனுதாரா்களுக்கு உள்ளூா் மொழிகளில் சட்ட புத்தகங்கள், தீா்ப்புகள், நீதிமன்றக் கட்டளைகள் கிடைக்க உதவும். அத்துடன் நீதிமன்ற பணிகள் உள்ளூா் மொழிகளில் நடைபெறுவதை எளிதாக்கும்.

நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தவும், நீதித்துறையுடன் மிக நெருக்கமாக நல்லுறவுடன் இருக்கவும் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT