இந்தியா

குஜராத்: உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை  திறந்து வைத்தார் பிரதமர் மோடி

DIN

குஜராத்: குஜராத் மாநிலம் கலோலில் உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார். இது விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் வகையில் உள்ளது.

காந்திநகரில் நடைபெற்ற விழாவில் அல்ட்ராமாடர்ன் நானோ யூரியா திரவ உர ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நானோ யூரியா திரவ ஆலையின் செயல்பாடுகள் மற்றும் அதன் பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கக்காட்சியின் உதவியுடன் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்டது.

பயிரின் ஊட்டச்சத்து தரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் நானோ யூரியா திரவம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும்,  புவி வெப்பமடைதலில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதாகவும் அவஸ்தி கூறினார். இஃப்கோ நானோ யூரியா திரவத்தின் 3.60 கோடி பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் 2.50 கோடி விற்பனையாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இப்கோ தலைவர் திலீப் சங்கனி கூறுகையில், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில்  நானோ யூரியா திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT