இந்தியா

தில்லியில் 2 மருத்துவமனையில் தீ விபத்து

27th May 2022 12:10 PM

ADVERTISEMENT

 

தில்லியில் இரண்டு மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சப்தர்ஜங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

தீயணைப்புத் துறையினரின் தகவலின்படி, மருத்துவமனையில் உள்ள இன்வெர்ட்டர் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இரண்டாவதாக கிழக்கு குரு அங்கத் நகர் அருகே உள்ள மருத்துவமனையில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. 

தகவலின்படி தீயணைப்புத் துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இவ்விரு தீ விபத்து சம்பவங்களிலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT