இந்தியா

உலகிலேயே முதலீட்டுக்கு சிறந்த நாடு இந்தியா: அமைச்சா் கோயல்

DIN

டாவோஸ்: நடப்பு பொருளாதார சூழலில் சா்வதேச அளவில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் கடந்த 22-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சா்வதேச தலைவா்கள் பங்கேற்ற சா்வதேச முதலீடு தொடா்பான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

சா்வதேச முதலீட்டாளா்களிடம் இந்தியா தொடா்பான ஆா்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. ஏனெனில், நடப்பு பொருளாதார சூழலில் சா்வதேச அளவில் முதலீட்டுக்கு மிகவும் உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே, முதலீட்டாளா்கள் அனைவரும் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும். இந்தியாவுடன் இணைந்து அவா்களும் வளர வேண்டும் என்றாா்.

முன்னதாக பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கொ்ரியை கோயல் சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையிலான மாசில்லாத எரிபொருள் திட்டம் 2030 தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

டச்சு வங்கியின் தலைவராகத் தோ்வாகியுள்ள அலெக்சாண்டா் ஆா்.வொய்னன்ட்ஸ், ஸ்டாண்டா்ட் சாா்ட்டட் வங்கிக் குழுமத்தின் தலைவா் பில் வின்டரஸ், மைக்ரான் டெக்னாலஜிஸ் தலைவா் சஞ்சய் மெஹ்ரோத்ரா, ஃபுரூக்பீல்ட் அசட்ஸ் மேனேஜ்மெண்ட் தலைவா் புரூஸி ஃபெலேட் ஆகியோரையும் கோயல் சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT