இந்தியா

சர்க்கரை ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு

25th May 2022 03:10 PM

ADVERTISEMENT

புது தில்லி :  சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு புதன்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஜூன் 1, 2022 முதல் அக்டோபர் 31, 2022 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை  குறிப்பிட்ட அனுமதியுடன் சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படும். அதற்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை இயக்குநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சர்க்கரை இயக்குநரகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஏற்றுமதி வெளியீட்டு ஆணைகள் மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் உலகிலேயே அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.

ADVERTISEMENT

உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் நிலையான விலையை நிலைநிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் சர்க்கரையின் விலைகள் கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விலைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,150-3,500 என்ற வரம்பில் உள்ளது, அதே சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறை விலை ரூ.36-44 என்ற வரம்பில் கட்டுப்பாட்டில் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT