இந்தியா

மும்பையில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்

25th May 2022 03:54 PM

ADVERTISEMENT

மும்பை: நாடு முழுவதும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி மும்பை போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு அடுத்த 15 நாள்களில் அமலுக்கு வரும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் கட்டாயம் என்ற விதியை மீறுபவர்களுக்கு ரூ.500  அபராதம் அல்லது 3 மாதம் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலும் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT