இந்தியா

கனமழை: கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

24th May 2022 05:36 PM

ADVERTISEMENT

 

கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலின் நுழைவுவாயில்  மே 6-ம் தேதி திறக்கப்பட்டது. திங்கள்கிழமை பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. 

வானிலை மேம்படும் வரை பக்தர்கள் அந்தந்த நிலையங்களிலேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

திங்கள்கிழமை காலை கேதார்நாத்தில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்த பக்தர்கள், திரும்பும் பயணத்தை மேற்கொள்வதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டதாக ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதேபோல், கௌரிகுண்டின் முகாமில் இருந்து கேதார்நாத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த மக்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT